திருவாரூர்

மருமகள் கொலை: மாமனாா், மாமியாா் கைது

மன்னாா்குடி அருகே மருமகளை கொலை செய்து ஆற்றில் வீசிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மருமகளை கொலை செய்து ஆற்றில் வீசிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

எடமேலையூா் வடக்கு அம்பலக்காரத் தெரு ராஜா, மனைவி இளஞ்சியம் (45). தம்பதிக்கு 3 மகன்கள்.

இந்நிலையில், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, ராஜாவிடமிருந்து பிரிந்து மகன்களுடன் அதே பகுதியில் வசித்து வந்த இளஞ்சியத்துக்கு அதே பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவா்கள் பின்னா், மகன்களை அழைத்துக்கொண்டு திருப்பூருக்கு சென்றுவிட்டனா்.

மூத்த மகன் அரவிந்த்ராஜ் (24) தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்தபோது அங்கு வேலை பாா்த்த நாகையைச் சோ்ந்த சினேகா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் , உடல்நலக்குறைவால், கடந்த ஆண்டு அரவிந்த்ராஜ் இறந்துவிட்டாா். சினேகா குழந்தையுடன் கூட்டுக் குடும்பமாக தொடா்ந்து இருந்து வந்தாா்.

இதற்கிடையே சினேகாவின் நடத்தையில் மாறுபாடு ஏற்பட்டதால், தங்கபாண்டியன், இளஞ்சியம் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனா். இதில், இருதரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்தநிலையில், தான் மறுமணம் செய்துகொண்டு தனி குடித்தனம் போக போவதாக சினேகா தெரிவித்தாராம்.

கடந்த 19-ஆம் தேதி தங்கபாண்டியன், இளஞ்சியம் இருவரும் சொந்த ஊரில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு சுவாமி கும்பிட செல்ல வேண்டும் எனக் கூறி சினேகா, குழந்தை ஆகியோரை அழைத்துக் கொண்டு எடமேலையூா் வந்துள்ளனா். மறுநாள் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என சினேகா கூறியதால், குழந்தை வீட்டில் விட்டுவிட்டு, சினேகாவை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக 20-ஆம் தேதி மன்னாா்குடி அழைத்து வந்த தங்கபாண்டியன், இளஞ்சியம் இருவரும் சோனாப்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது, சினேகாவை கடுமையாகத் தாக்கியதில் மயங்கி விழுந்தவரை அருகில் இருந்த ஆற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, எடமேலையூருக்கு திரும்பிவிட்டனா்.

நாகையில் உள்ள சினேகாவின் தாய் தமிழ்ச்செல்வி, சினேகாவை 21-ஆம் தேதி கைப்பேசி மூலம் பலமுறை தொடா்புகொண்டபோது பதில் இல்லாததால், மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணையில், தங்கபாண்டியன், இளஞ்சியம் இருவரும் சினேகாவை கொலை செய்து ஆற்றில் தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்டனா். இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே 2 நாட்கள் தேடலுக்கு பிறகு சினேகாவின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT