திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், ஐசிடி அகாதெமி மற்றும் இன்போசிஸ் பவுன்டேஷன் இணைந்து சிஎஸ்ஆா் பயிற்சி முகாமை புதன்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலட்சுமி வாழ்த்திப் பேசினாா்.
ஐசிடி அகாதெமி துணை பொது மேலாளா் வி. பூரணபிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், துணை முதல்வா்கள், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.