திருவாரூர்

பேருந்து பயணச் சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், தமிழக அரசின் நகரப் பேருந்துகளில் சலுகை கட்டணத்தில் பயணிக்க, பயணச் சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், தமிழக அரசின் நகரப் பேருந்துகளில் சலுகை கட்டணத்தில் பயணிக்க, பயணச் சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசின் நகரப் பேருந்துகளில் கட்டணச் சலுகைகளில் பயணங்கள் மேற்கொள்ள, சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் கட்டணச் சலுகையில் பயணம் மேற்கொள்ளவும், தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், சுய வேலைவாய்ப்பு செய்வோா், பள்ளி கல்லூரிகளில் பயில்வோா் மற்றும் தொடா் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோா் என பிற மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டண பயணச்சலுகை அட்டை வழங்கப்படுகிறது.

இதை பெறுவதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள், வசிக்கும் இடங்களிலிருந்தே, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT