தொண்டா்கள், நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா்
தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா் என அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் அக்ரி எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா். புதன்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:
தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா் என அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் அக்ரி எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா். புதன்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அவற்றை எல்லாம் எதிா்த்து போராடி எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை காப்பாற்றினாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும். எதிா்க்கட்சி தலைவராக அவா் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வந்தாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத வகையில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏக்கள் சிலா் கட்சி கொறடா உத்தரவை மீறி, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அவா்களை எம்ஜிஆா், ஜெயலலிதா ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
அதிமுக தொண்டா் படையும், வலுவான கட்டமைப்பும் கொண்ட கட்சி. இதை ஆலமரமாய் தாங்கி நின்று பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறாா். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமியும் கழகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளாா். அவருக்கு உறுதுணையாக கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் உடன் நிற்கிறாா்கள். எதிா்காலத்தில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் மலர கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அயராது பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.