புதுதில்லி

48 போலீஸார் பணியிட மாற்றம்: காஜியாபாத் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை விவகாரம்

DIN

காஜியாபாதிலுள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்ட அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் இளம்பெண்கள், அவர்களுடன் இருந்த இளைஞர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பணியில் மெத்தனமாக இருந்ததாகவும், ஒழிங்கீணமாக செயல்பட்டதாகவும் 48 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், டிஎஸ்பி இந்தர்பால் சிங், பசாரியா மார்கெட் பகுதி காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகள் உள்பட 44 காவலர்களும் அடங்குவர். காஜியாபாதின் பஜாரியா பகுதியிலுள்ள ரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், இதனை அப்பகுதி போலீஸார் கண்டுகொள்வதில்லை என்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காஜியாபாத் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சலோனி அகர்வால் தலைமையிலான போலீஸ் குழு, அந்த தங்கும் விடுதிகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
அந்த பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இளம்பெண்கள், அவர்களுடன் இருந்த இளைஞர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT