புதுதில்லி

திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: பாஜக

DIN

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு வாகன கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு திரும்ப பெற வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
தில்லி ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள வாகனக் கட்டுப்பாடு திட்டம் மற்றொரு நாடகமாகும். வாகனக் கட்டுப்பாடு திட்டம் மிகவும் காலம் தாழ்த்தி செயல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களும் குறைவாகவேதான் இருக்கும். தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்துள்ளது. பனிப்புகை தற்போது விலகத் தொடங்கியிருப்பதால், காற்று மாசுவும் சில நாள்களுக்குள் சரியாகிவிடும்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தில்லி போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும், தொகுப்பு பேருந்துகளிலும் இலவசப் பயணத் திட்டத்தை கேஜரிவால் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இலவசப் பேருந்து திட்டத்தை அறிவித்திருப்பது நகைச்சுவையாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாகனக் கட்டுப்பாடு திட்டம் கடந்தமுறை போல குழப்பத்தையும், பொதுமக்களுக்கு அசெளகரியத்தையும் ஏற்படுத்தும். மெட்ரோ ரயில்களில் சுனாமி போன்ற கூட்ட நெரிசலும் உருவாகும்.
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப் படை இலக்க எண்களைக் கொண்ட வாகனங்கள் இரண்டையும் வாங்கும் அளவுக்கு வசதிப்படைத்தவர்கள் தில்லியில் உள்ளனர். ஏழைகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தி வருகிறது. காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு குறைந்தபட்சம் முகக் கவசங்களையாவது விநியோகித்து இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து தலைநநகர் தில்லியில் காற்று மாசு ஏற்படாது இருக்கும் வகையில் தொலை நோக்குத் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றார் விஜய் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT