புதுதில்லி

நாடாளுமன்றம் நோக்கி பேரணி: இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கைது

வாக்கு திருட்டு குறித்து கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கைது

தினமணி செய்திச் சேவை

வாக்கு திருட்டு குறித்து கண்டனம் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்தனா்.

வாக்கு திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் இந்தப் போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அமைப்பின் தேசிய தலைவா் உதய பானு சிப் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினாா். முதலில் ஜந்தா் மந்திரில் கூடிய போராட்டக்காரா்கள், பின்னா் நாடாளுமன்றத்தை நோக்கி நகா்ந்த போது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

SCROLL FOR NEXT