புதுதில்லி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி இன்று தில்லி வருகை

DIN

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி பீடாதிபதி  ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி வியாழக்கிழமை தலைநகர் தில்லிக்கு வருகை தரவுள்ளார்.
 ஆண்டு தோறும் அகில இந்திய அளவிலான "பாரத் யாத்ரா' ஆன்மிகப் பயணத்தை ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி மேற்கொண்டு வருகிறார். இந்த ஆன்மிகப் பயணத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தார். இதன் ஒரு பகுதியாக  வியாழன், வெள்ளி (மார்ச் 15, 16)  ஆகிய இரண்டு நாள்கள் தில்லியில் தங்குகிறார். 
தில்லி வசந்த் குஞ்சில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்கு அவர் வருகை தருகிறார்.  இந்த இரு தினங்களிலும் அவர் பக்தர்களைச் சந்தித்து அருளாசி வழங்குகிறார். இரு நாள்களிலும் காலை 10.30 மணி முதல் சத்சங்கம், தியானம், பஜனை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT