புதுதில்லி

இறக்குமதி மணல் விவகாரம்: வழக்கு விசாரணை டிச.7-க்கு ஒத்திவைப்பு

DIN

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 
அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், இறக்குமதி மணலை கொள்முதல் செய்ய ரூ.10.46 கோடிக்கான வரைவோலை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இறக்குமதி மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்ததுடன், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கேட்டக் கொண்டதன்படி வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT