புதுதில்லி

ஜிடிபி மருத்துவமனை விவகாரம்: தில்லி அரசின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

DIN

குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்து தில்லி அரசு கடந்த மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஜிடிபி மருத்துவமனையில் இந்த உத்தரவு முன்னோடித் திட்டமாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில், சோஷியல் ஜூரிஸ்ட் என்ற அரசு சாரா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. அதில், "மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது, மக்கள் சார்ந்திருக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. இதுபோன்ற பாகுபாடு நாட்டில் வேறெங்கும் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் அமர்வு விசாரித்து, வழக்கு குறித்த உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்பாக தில்லி அரசின் உத்தரவு செல்லாது என அறிவித்தனர்.

மேல்முறையீடு செய்ய தில்லி அரசு திட்டம்
தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தில்லி அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்பாக அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT