புதுதில்லி

தெற்கு தில்லியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றல்

DIN

தெற்கு தில்லியில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டதாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு தில்லி மாநகராட்சியின் ஆளுமைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருந்தன. சில நிலங்களில் வேலி போல சுவர் எழுப்பப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை இடித்து அகற்றியது.
இதில் மைதான்கர்ஹி பகுதியில் உள்ள ஜேஜே காலனியும் அடங்கும். இந்த வகையில் மொத்தம் 150 பிக்ஹா நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். விடுவிக்கப்பட்ட அனைத்து நிலங்களும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT