புதுதில்லி

மேம்பாட்டுப் பணி: டிஜேபி  இணைய சேவை ஒரு வாரம் செயல்படாது

DIN

தில்லி ஜல் போர்டின் (டிஜேபி) இணைய சேவைகளை வரும் 30-ஆம் தேதி வரை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி ஜல்போர்டு அதிகாரிகள் கூறியதாவது: 
தில்லி ஜல்போர்டின் பில்லிங் முறையின் செயல்திறன் அதிகரிக்கப்படவுள்ளது. இதனால், அதன் வருவாய் மேலாண்மைப் பிரிவு மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தில்லி ஜல் போர்டின் அனைத்து வகையான இணைய சேவைகளை வரும் 30-ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
இந்த மேம்பாட்டுப் பணி பணி காரணமாக ஒரு வார காலத்துக்கு இணைய சேவைகள் நிறுத்தப்படுவதால் நுகர்வோர்கள் சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும். இருப்பினும், குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கு மண்டல வருவாய் அலுவலகத்தில் இதற்கென தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு நுகர்வோர்கள் குடிநீர் கட்டணங்களைச் செலுத்தலாம். மேலும், கட்டணங்களைச் செலுத்துவதற்கான இறுதி நாள் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த அபராதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT