புதுதில்லி

தங்கம் கடத்தல்: தில்லி விமான நிலையத்தில் இளைஞர் கைது

DIN

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக 29 வயது இளைஞரை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அவர் கடத்தியிருப்பது தெரியவந்ததாக சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திரா காந்தி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹாங்காங்கில் இருந்து தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு கடந்த திங்கள்கிழமை வந்திறங்கிய விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருப்பதாகவும், அவர் மும்பை செல்லும் விமானத்தில் அடுத்த நாள் செல்லவிருப்பதாகவும் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரிடம் சோதனையிடப்பட்டது. 
அப்போது, அவரது உடைமையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கெனவே பல்வேறு விமானங்கள் வாயிலாக பலமுறை தங்கக் கட்டிகளையும், ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸிகளையும் கடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரி தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு தில்லி விமான நிலையத்தில் சவூதி அரேபியாவில் இருந்து வந்த நபரிடமிருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT