புதுதில்லி

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய கபில் சிபல் வலியுறுத்தல்

DIN

ஆட்சியில் இருப்பவர்கள் தேசத்துரோக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
காலனி ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் (இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு124ஏ) தற்போதைய காலத்தில் தேவையில்லாத ஒன்று. உண்மையான தேசத்துரோக சட்டம் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் அமைப்புகளையும், சட்டங்களையும் தவறாகப் பயன்படுத்துவதுதான். மேலும், வன்முறையைத் தூண்டுவதன் மூலம் பாதுகாப்பையும், அமைதியையும் குலைப்பதுதான். 2019-இல் அவர்களைத் தண்டியுங்கள். அரசை மாற்றுங்கள், தேசத்தை காப்பாற்றுங்கள் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT