புதுதில்லி

கார் கடத்தலில் ஈடுபட்டஉ.பி. இளைஞர் கைது

DIN


மாநிலம் விட்டு மாநிலம் சென்று கார் கடத்தலில் ஈடுபட்டு வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 திருட்டுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தென் கிழக்கு தில்லி மாவட்டக் காவல் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் சனிக்கிழமை தெரிவித்ததாவது: கார் கடத்தலில் ஈடுபடும் நபர் ஓக்லா எஸ்டேட் சாலை பகுதியில் உள்ள ஓக்லா சுரங்கப் பாலம் பகுதி அருகே வருவதாக சம்பவத்தன்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் தடுப்புக் கட்டைகள் போட்டு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, காலிந்தி குஞ்ச் பகுதியில் இருந்து ஓக்லா நோக்கி வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார். இதையடுத்து, அந்தக் காரை போலீஸார் மடக்கி நிறுத்தினர். அப்போது, காரில் இருந்த ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார்.  காரை ஓட்டிவந்த அவர்,  உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாசுதீன் (29) என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு இடங்களில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 3 கார்களும், கார் சாவிகளும் மீட்கப்பட்டன. தப்பியோடிய சல்மானைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி சின்மய் பிஸ்வால் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT