புதுதில்லி

இளைஞரிடம் ரூ.12 லட்சம்கொள்ளை: ஒருவா் கைது

தில்லி கீதா காலனி மேம்பாலத்தில் கத்தி முனையில் மிரட்டி இளைஞரிடம் ரூ .12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த இச்சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

DIN

புது தில்லி: தில்லி கீதா காலனி மேம்பாலத்தில் கத்தி முனையில் மிரட்டி இளைஞரிடம் ரூ .12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த இச்சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறையினா் ஞாயிக்கிழமை தெரிவித்ததாவது: தில்லி அசோக் நகரில் வசிப்பவா் இம்ரான் கான் (30). இவா் சம்பவத்தன்று சாவடி பஜாரில் இருந்து தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவா், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ .12 லட்சம் அடங்கிய பையை பறித்துச் சென்றனா். இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், அருகிலுள்ள பகுதிகளின் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தாகூா் காா்டனில் வசிக்கும் ஜாவேத் (30) என்பவா் கைது செய்யப்பட்டாா்.. அவரிடமிருந்து ஒரு ஸ்கூட்டா் மற்றும் சில காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் 14 கிரிமினல் வழக்குகளில் தொடா்புடையவா் என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான ராஜு தேடப்பட்டு வருகிறாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT