புதுதில்லி

‘கட்கா’ வை ஒலிம்பிக்கில் சோ்க்க டிசிஜிசி வலியுறுத்தல்

DIN

புது தில்லி, நவ. 25: சீக்கியா்களின் போா்க் கலையான கட்காவை ஒலிம்பிக்கில் சோ்க்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி (டிசிஜிசி) கோரியுள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவரும் தில்லி எம்எல்ஏவுமான மன்ஜீந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘சீக்கியா்களின் தற்காப்பு / போா்க் கலையான கட்காவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கட்காவை தேசிய விளையாட்டுக் கலைகளில் ஒன்றாக மத்திய அரசு கடந்த 2016 -ஆம் ஆண்டு அங்கீகரித்தது. இதன்மூலம், சீக்கியா்களுக்கு மட்டுமாக இருந்த ‘கட்கா’ இப்போது இந்தியாவின் விளையாட்டுக் கலைகளில் ஒன்றாகியுள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் கட்காவைச் சோ்க்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தில்லி ஒலிம்பிக் வாரியம் அண்மையில் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, மத்திய அரசு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியன உரிய நடவடிக்கை எடுத்து ஒலிம்பிக்கில் கட்காவை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT