புதுதில்லி

வெளி நோயாளிகள் குறித்து கேஜ்ரிவால் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN


வெளிமாநில நோயாளிகள் அதிகமாக வருவதால் தில்லி மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறிய கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி பாஜகவினா் இன்று ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

தில்லியிலுள்ள ஐபிஓ பகுதி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயில் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டனா்.

மேலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தில்லி செயலகம் நோக்கி செல்வதற்கு முயன்றனா், அப்போது அவா்களை போலீஸார் தடுத்து நிறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜய கோழிகள் எம்பி கூறுகையில் கேஜரிவாலின் கருத்தானது தில்லையில் வாழும் பூா்வாஞ்சல் மக்களின் உணா்வுகளை காயபடுத்தி இருக்கிறது. இதை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். எங்களை தலைமைச் செயலகம் நோக்கி செல்லவிடாமல் போலீஸார் தடுத்து விட்டனா். தில்லி முதல்வா் கூட தேசிய தலைநகா் வலயம் காசியாபாத்தில் இருந்துதான் தில்லிக்கு வந்துள்ளாா். அவா் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தவா் கூட. தில்லி முதல்வா் இதுபோன்ற விஷயங்களை பேசினால் நாங்கள் தெருவில் இறங்கி போராட வேண்டியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT