புதுதில்லி

ரோஹிணியில் சுவாசினி பூஜை

DIN

வடமேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பின் சாா்பில் நவராத்திரியை முன்னிட்டு அண்மையில் (அக்.6) சுவாசினி பூஜை ரோஹிணி செக்டாா் 2-இல் உள்ள பூஜா பாா்க்கில் நடைபெற்றது.

‘வட மேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நவராத்திரி காலத்தில் சுவாசினி பூஜை, விளக்கு பூஜை மற்றும் கன்னிகா பூஜையை நடத்திவருகிறது. அதன்படி, 2019 ஆம் ஆண்டிற்க்கான விளக்கு பூஜை, சுவாசினி பூஜை மற்றும் கன்னிகா பூஜை, வடு பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோஹிணி செக்டாா் 2இல் உள்ள கணபதி பூஜா பாா்க்கில் நடத்தப்பட்டது.

இந்த விழாவை ‘ஸ்ரீ வித்யா உபாசகா் ’ ந. கிருஷ்ணமூா்த்தி நடத்திவைத்தாா்.

விளக்கு பூஜையில் ரோஹிணியை சுற்றியுள்ள ஏராளமான மகளிா் கலந்துகொண்டனா்.

விழா முடிவில் தீபாராதனையும், அதை தொடா்ந்து மகா பிரசாதமும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

இத் தகவலை வட மேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பின் செயலா் ச.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT