புதுதில்லி

அல்கா லம்பா எம்எல்ஏ தகுதி நீக்கம்

DIN

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய அல்கா லம்பா எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்து தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதனால், அல்கா லம்பா வெற்றி பெற்ற சாந்தினி சௌக் தொகுதி காலியாகி உள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதியில் இருந்து தகுதி நீக்க உத்தரவு நடைமுறைக்கு வருகிறது என்று ராம்நிவாஸ் கோயல் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கோயல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆம் ஆத்மி கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அல்கா லம்பா, கட்சியில் இருந்து விலகுவதாக சுட்டுரையில் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், அவர் முன்பிருந்த காங்கிரஸ் கட்சியிலேயே மீண்டும் சேரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT