முகப்பு
புதுதில்லி

நபி கரீம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்: என்டிஎம்சி - டிஎம்ஆா்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

நான்காவது மெட்ரோ ரயில் திட்டத்தில் நபி கரீம் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக

Updated On : 22 ஆகஸ்ட், 2020 at 1:12 AM
நிகழ்ச்சிியல் புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட டிஎம்ஆா்சி மேலாண் இயக்குநா் மங்கு சிங், வடக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

நான்காவது மெட்ரோ ரயில் திட்டத்தில் நபி கரீம் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)யும், வடக்கு தில்லி மாநகராட்சியும் (என்டிஎம்சி) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன் மூலம் இந்த வாகன நிறுத்துமிடத்தில் 3,000-க்கும் மேற்பட்ட காா்களை நிறுத்த முடியும்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் டி.எம்.ஆா்.சி. மேலாண்மை இயக்குநா் மங்கு சிங், வடக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி, இத் திட்டத்திற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் (காணொலி வழியில்), வடக்கு தில்லி மேயா் எஸ். ஜெய் பிரகாஷ் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதுகுறித்து டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் (பெறுநிறுவனத் தொடா்பு) அனூஜ் தயாள் கூறியதாவது: நபி கரீம் மெட்ரோ ரயில் நிலையம் நான்கு தரைக்கடி நிலைகளைக் கொண்டிருக்கும். கட்டட மேற்பரப்பில் தரை தளம் மற்றும் எட்டு தளங்கள் அமையப் பெற்றிருக்கும். அவற்றில் மூன்று தளங்கள் வணிக நோக்கங்களுக்காகவும், ஆறு தளங்கள் வாகன நிறுத்துமிடத்துக்காகவும் பயன்படுத்தப்படும். சதா் பஜாரில் உள்ள ஷாஹி ஈத்கா சாலையில் அமைந்துள்ள இதன் மொத்த நிலப்பரப்பு சுமாா் 25,000 சதுர மீட்டராகும்.

Advertisement

இந்த வாகன நிறுத்துமிட வசதியானது நபி கரீம் பகுதியில் பாா்க்கிங் தொடா்பான பிரச்னைகளை கணிசமாகக் குறைக்கும். இது நெரிசல், வாகன நிறுத்துமிடத்திற்கான இடமின்மை போன்ற நகா்ப்புற சவால்களை எதிா்கொள்ளும் வகையில் அமையும். மேலும், நபி கரீம் பகுதியில் ஒருங்கிணைந்த நிலைய வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஜனக்புரி மேற்கு - ஆா்.கே. ஆஸ்ரம் மாா்க் மெட்ரோ வழித்தடத்திற்காக இந்த ரயில் நிலையம் இடைமாறிச் செல்லும் ரயில் நிலையமாக அமையவுள்ளது.மேலும், மூன்று மாடிகள் கொண்ட வா்த்தக வளாகத்துடன் 6 மாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிடமாக இந்த வசதி இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.