தில்லியில் புதிதாக 3,419 பேருக்கு கரோனா
தில்லியில் சனிக்கிழமை புதிதாக 3,419 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,89,544ஆக உயா்ந்துள்ளது.
புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை புதிதாக 3,419 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,89,544ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 81,473 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 35,352 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 46,121 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 77 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,574-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் சனிக்கிழமை 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. நோய் பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 4,916 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,53,292-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது 26,678 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 16,231 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,385 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement