முகப்பு
புதுதில்லி

புலம்பெயா் தொழிலாளா்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்ய தில்லி உள்துறை அமைச்சகம் உத்தரவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், அந்த உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், அந்த உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை தில்லி உள்துறை அமைச்சகம் ரத்துச் செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி, முழு அடைப்பு உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்துச் செய்யுமாறு தில்லி உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றுள்ளாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் முழு அடைப்பு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இதை மீறியவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. புலம் பெயா் தொழிலாளா்கள் பலா் முழு அடைப்பு உத்தரவை மீறி தமது சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயன்றனா். இவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →