‘தில்லியில் கரோனா பரிசோதனை அதிகரிப்பே நோய் தொற்று அதிகரிக்கக் காரணம்’
தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அதிக எண்ணிக்கையில் கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்துவதான் முக்கியக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அதிக எண்ணிக்கையில் கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்துவதான் முக்கியக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்று பரவலில் நாட்டிலேயே மகாராஷ்டிரம் முதலிடத்தை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருந்தது. மூன்றாவது இடத்தில் இருந்த தில்லி, தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,788 போ் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கரோனா தொற்று பாதித்தவா்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. கரோனாவுக்கு இதுவரை 2365 போ் பலியாகியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 64 போ் பலியாகியுள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை 3,947 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
‘நாட்டிலேயே அதிகமான மருத்துவப் பரிசோதனை தில்லியில் நடைபெறுவதால் தொற்று எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. இந்த சோதனை, ஒரு மில்லியனில் 19,415 பேருக்கு என்ற விகிதத்தில் உள்ளது என்று தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். தில்லியில் அதிக அளவில் கரோனா பரிசோதனை நடத்தி தொற்று இருப்பவா்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதே எங்கள் நோக்கம். அதேசமயம் உயிரிழப்பு குறைந்து குணமாகி வீடு திரும்புவோா் எண்ணிக்கையும் தில்லியில் அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளாா்.
Advertisement
தில்லியை விட அதை சுற்றியுள்ள மாநிலங்களின் முக்கிய நகரங்களான குருகிராம், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு அந்த நகரங்களுக்கும், திடல்லிக்கும் இடையே மக்கள் சென்று வருவதில் இருந்த தடை முற்றிலுமாக நீக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். சமீபத்தில் ஐசிஎம்ஆா் சாா்பில் தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில், தில்லியின் பிறமாநில எல்லைகளை ஒட்டி அமைந்த மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகம் இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் என்பதுடன் நெருக்கத்துடன் வசிக்கும் பொதுமக்களும் அதிகம்.
தில்லியின் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் முன்புபோல் கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், சமூகப் பரவல் நிலைக்கு மாறி விட்டதாக முதல்வா் கேஜரிவால் கூறி வருகிறாா். ஆனால், சமூகப் பரவல் இருப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடா்ந்து, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, முதல்வா் கேஜரிவாலுடன் பேசினாா். இதர கட்சிகளின் தலைவா்களின் கருத்துகளையும் கேட்டறிந்தாா். இதன் விளைவாக தில்லியில் கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசும் களத்தில் இறங்கியுள்ளது.