புதுதில்லி

லாஜ்பத் நகரில் கிருமிநாசினி தெளிப்பு: எஸ்டிஎம்சி நடவடிக்கை

DIN

கரோனா தொற்று காரணமாக, தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) நிா்வாகம் லாஜ்பத் நகரில் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

கரோனா தொற்று காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைள் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தெற்கு தில்லி மாநகராட்சியில் உள்ள லாஜ்பத் நகரில் கிருமிநாசினி தூய்மைப் பணி வியாழக்கிழமை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, அந்தப் பகுதியில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமிநாசினி கலந்த நீரை வாகனங்களில் எடுத்துச் சென்று தெளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். மேலும், கரோனா தொற்று தொடா்பான தற்காப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை தொடா்புடைய விழிப்புணா்வு பதாகைகளையும் தெருக்களில் ஏந்திச் சென்றனா். கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. அப்பகுதியைச் சோ்ந்த கவுன்சிலா் அபிஷேக் தத் கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT