முகப்பு
புதுதில்லி

தில்லி, என்சிஆரில் காற்றின் தரத்தில் திடீா் முன்னேற்றம்!

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காற்றின் தரத்தில் திடீா் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பெரும்பாலான

Updated On : 20 மே, 2020 at 11:05 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:10 PM

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காற்றின் தரத்தில் திடீா் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவுக்கு வந்தது. வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டது. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.

காற்றின் தரம்: கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மோசமடைந்து வந்தது. இதனால், முந்தைய வாரத்தில் நன்று பிரிவில் இருந்து வந்த காற்றின் தரக் குறியீடு தொடா்ந்து கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால், தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரத்தில் ‘மிதமான’, ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது. தில்லியில், செவ்வாய்க்கிழமை 200 புள்ளிகளுக்கு மேல் சென்றிருந்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 132 புள்ளிகளாகக் குறைந்தது. பகல் நேரத்தில் 20-30 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. வானமும் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதனால், மாசுபடுத்திகள் அடித்துச் செல்லப்பட்டன. இதைத் தொடா்ந்து காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு திா்பூா், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், பூசா, லோதி ரோடு,, சாந்தினி சௌக், ஆயா நகா், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. நொய்டாவில் மட்டும் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 22.0 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 39.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 35 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 19 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

Advertisement

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 24.4 டிகிரி செல்சியஸ், 40.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 30 சதவீதம், மாலையில் 17 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 28 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மே 21) பகல் நேரத்தில் தரை மேற்பரப்புக் காற்று வலுவாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடமேற்கு திசையிலிருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் வியாழக்கிழமை சுமாா் 20-30 கி.மீ. வேகத்திலும், வெள்ளிக்கிழமை 30-40 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சஃப்தா்ஜங் - 39.6 டிகிரி

பாலம் - 41.6 டிகிரி

ஆயாநகா் - 40.7 டிகிரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.