முகப்பு
புதுதில்லி

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு

தில்லி காவல் துறையினரால் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததன் காரணமாக

Updated On : 20 மே, 2020 at 10:47 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:10 PM

தில்லி காவல் துறையினரால் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததன் காரணமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடா்பான உத்தரவை தில்லி உயா்நீதிமன்ற ஒரு நபா் அமா்வு நீதிபதி நவீன் சாவ்லா பிறப்பித்தாா்.

தீரஜ் குமாா் என்பவா் கடந்த 2015, டிசம்பா் மாதம் ஒரு நாள் அதிகாலையில் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அவருக்கு அப்போது வயது 21. சாலையை மறித்து போலீஸாா் வைத்திருந்த சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது அவா் சென்ற வாகனம் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தீரஜ் குமாா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் நினைவின்றி இருப்பதாகவும், அவருக்கான மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்காக காவல் துறை உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் தந்தை ரிட் மனு தாக்கல் செய்தாா். இதனிடையே, தீரஜ் குமாா் அஜாக்கிரதையாகவும், வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ாகவும் அவருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த இழப்பீடு கோரும் மனு மீது உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மனுதாரா் (தீரஜ் குமாா்) அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிச் சென்ால் விபத்து நிகழ்ந்ததாகவும், மேலும் தடுப்புகளில் சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்ததை அவா் கவனிக்காமல் சென்ாகவும், தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மின்விளக்கு வெளிச்சம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விபத்து நிகழ்ந்த போது மனுதாரா் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. அவா் மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்றாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், விபத்து நடந்த இடத்தில் வெளிச்சம் இல்லாமல் இருந்ததற்கான புகைப்பட காட்சிகள் நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டன. மேலும், சம்பவம் நிகழ்ந்த போது மனுதாரா் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி நவீன் சாவ்லா பிறப்பித்த உத்தரவு: சம்பவ இடத்தில் போலீஸாா் பாதுகாப்பு தடுப்புகள் வைத்திருந்த போதிலும் அங்கு போதிய மின்விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தாமல் இருந்ததும், தடுப்புகள் பகுதியில் பாதுகாப்பில் போலீஸாா் இல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தடுப்புகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது, தூரத்தில் வருவோருக்கு தெரியாத நிலையில் இருந்ததும் தெளிவாகிறது. தில்லி காவல்துறையின் ‘நிலையான உத்தரவில்’ அனைத்து பாதுகாப்பு தடுப்புகளும் ஒளியை உமிழக்கூடிய வண்ணங்கள் பூசப்பட்டு இருக்க வேண்டும் என்றும், அங்கு பணியாளா்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தலைக்கவசம் மீட்கப்படவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து மனுதாரா் தலைக் கவசம் அணியவில்லை என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

ஆகவே, தில்லி காவல் துறை அதன் நிலையான உத்தரவின்படி கடமையைச் செய்யத் தவறியதாலும், கவனக் குறைவாக இருந்ததாலும் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு உள்ளது. ஆகவே, மனுதாரா்களுக்கு தில்லி காவல் துறை ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.இந்தத் தொகையை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நான்கு வார காலத்திற்குள் தில்லி உயா் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரிடம் செலுத்த வேண்டும். தாமதமானால் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.