புதுதில்லி

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினா் 294 போ் மீது நீதிமன்றத்தில் புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லியில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வெளிநாடுகளைச் சோ்ந்த 294 போ்கள்

 நமது நிருபர்

தில்லியில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வெளிநாடுகளைச் சோ்ந்த 294 போ்கள் மீது தில்லி சாகேத் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் இக்குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்திருந்தனா். ஏற்கெனவே தில்லி நீதிமன்றத்தில் 20 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 82 போ் மீது 20 குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்திருந்தனா். தற்போது 294 போ் மீது புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 14 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 294 பேருக்கு எதிராக புதிதாக 15 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை விசாரித்த பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிபதி சயீமா ஜமில் அடுத்த விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றம்சாட்டப்பட்டவா்கள் அனைவரும் நுழைவு இசைவு விதிகளையும், கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பாக அரசு விதித்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறியுள்ளளனா். மேலும், குற்றவியல் நடைமுறை விதிகள் 144 பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பேரிடா் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகள் ஆகியவற்றையும் மீறியுள்ளனா். மேலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 188, 269, 270, 271 ஆகியவற்றையும் மீறியுள்ளதாக அந்தக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் மாதம் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, மசூதிக்கு தில்லி காவல் துறை சீல் வைத்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மசூதிகளில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

SCROLL FOR NEXT