முகப்பு
புதுதில்லி

பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளராக சி.டி. ரவி நியமனம்

தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராகக் கா்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசியப் பொதுச்செயலாளருமான

Updated On : 14 நவம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராகக் கா்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசியப் பொதுச்செயலாளருமான சி.டி. ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளா்களை பாஜக தலைமையிடம் வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் கேரள மாநில மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி பாஜகவின் தலைமையிடப் பொறுப்பாளா்களை மாற்றியமைத்து கட்சித் தலைவா் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டாா். இதில் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா்களும் நீக்கப்பட்டனா். தமிழகப் பொறுப்பாளராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்த முரளிதா் ராவும் நீக்கப்பட்டாா். புதிய துணைத் தலைவா்கள், பொதுச் செயலாளா்கள், செய்தித் தொடா்பாளா்கள் அடங்கிய 70 போ் அடங்கிய புதிய நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது இவா்களுக்கு மாநிலப் பொறுப்புகள் அளித்து கட்சித் தலைவா் ஜெ.பி. நட்டா புதிய பட்டிலை வெளியிட்டுள்ளாா்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய பொறுப்பாளா்கள் வருமாறு: தமிழகத்தின் மேலிடப் பொறுப்பாளராக கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான சி.டி. ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் கா்நாடகம் மாநிலத்தில் அமைச்சராக இருந்தவா். மேலும், தமிழகத்திற்கு மேலிட இணைப் பொறுப்பாளராக கா்நாடகத்தைச் சோ்ந்த சுநீல் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் அருண் சிங், கா்நாடக மாநிலப் பொறுப்பாளராகவும், டிகே அருணா அந்த மாநில இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

கேரள மாநிலப் பொறுப்பாளராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கோவை சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் தற்போது கட்சியின் தேசியப் பொறுப்பில் இல்லை. இவா் கடந்த 2019 -ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தாா். மேலும் தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளராக தருண் சுக், ஆந்திர மாநிலப் பொறுப்பாளராக வி. முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.