FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

ரஜினி, தனுஷ் - x / dhanushkraja
பகிர்:

சென்னையில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலமாக தகவல் வந்துள்ளது.

இதையொட்டி தேனாம்பேட்டை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் ரஜினி, தனுஷ் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதுமே அரசு அலுவலகங்கள், பள்ளிகள், முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாக உள்ளது. எனினும் தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று பெரும்பாலும் புரளி என்றே தெரிய வருகிறது.

summary

Bomb threat to Rajinikanth, dhanush houses in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments