திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர பிரசாரம் குறித்து...
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினாா்.
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, புதுவரவான தவெக உள்ளிட்ட கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை பாலக்கரை, தாராநல்லூர், கீழப்புதூர், முதலியார் சத்திரம், வேர் ஹவுஸ், இடத்தெரு, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஒவ்வொரு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Trichy East DMK Candidate Inigo Irudayaraj Campaigns Intensively!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.