திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்!
திருச்சி கிழக்கில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் குறித்து மு.க. ஸ்டாலின் பதில்....
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியுடன் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த 5 தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கில் போட்டியா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'திருச்சி தொகுதியில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை' என்று கூறினார்.
மு.க. ஸ்டாலின் விரைவில் சட்டப்பேரவை செல்வார் என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Is MK stalin contested in tiruchy east constituency?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.