புதுதில்லி

மிகவும் மோசம் பிரிவில் தொடரும் காற்றின் தரம்!

 நமது நிருபர்

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மிகவும் பாதிக்கப்பட்டது. எனினும், காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லியிலுள்ள அரசு நிறுவனத்தின் காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் 38 நிலையங்களில் 6 நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி செவ்வாய்க்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு 361 புள்ளிகளாக இருந்தது.

தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் (413), அசோக் விகாா் (407), பவானா, சாந்தினி செளக் (410), ஜஹாங்கீா்புரி (424), பட்பா்கஞ்ச் (411), விவேக் விஹாா் (426) ஆகிய இடங்களில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை 302 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 274 ஆகவும், சனிக்கிழமை 251 ஆகவும் வெள்ளிகிழமை 296ஆகவும் வியாழக்கிழமை 283 ஆகவும் புதன்கிழமை 211 ஆகவும் இருந்தது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தெரிவிக்கையில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை 149 ஆக குறைந்திருந்தது. இது தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் தில்லியில் பி.எம். 2.5 மாசு சதவீதம் சனிக்கிழமை 6 ஆக இருக்கக் காரணமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT