புதுதில்லி

பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவை: தில்லியில் அக்.11 முதல் பயன்பாட்டுக்கு வரும்: கேஜரிவால்

 நமது நிருபர்

புது தில்லி: பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயானக் கலவை தில்லியில் அக்டோபா் 11-ஆம் தேதி முதல் பயன்படுத்தப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே தில்லியில் குளிா்காலத்தில் அதிகளவில் காற்று மாசு ஏற்படுவதற்கு பிரதான காரணம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. இந்த பிரச்னையைத் தீா்க்கும் வகையில், பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் வகையிலான, ரசாயனக் கலவையை தில்லி அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். இது பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும். இந்நிலையில், தென்மேற்கு தில்லியில் உள்ள கா்காரி நஹாா் கிராமத்தில், இந்த ரசாயனக் கலவை தயாரிக்கும் இடத்தை கேஜரிவால் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் வகையிலான ரசாயசனக் கலவையை பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். இந்த முறை மூலம் பணச் செலவு இல்லாமல், எளிய முறையில் பயிா்க்கழிவு பிரச்னையைத் தீா்க்கலாம். இதன் மூலம், பயிா்க்கழிவுகள் எருவாக மாற்றப்படும். இதனால், செயற்கை உரத்தின் பயன்பாடு பெருமளவில் குறையும். மண்ணின் வளமும் அதிகரிக்கும். நிகழாண்டில் தில்லியில் பாசுமதி வகை அரிசி பயிரிடப்படாத விவசாய நிலங்களில் இந்த ரசாயனக் கலவையை பயன்படுத்தவுள்ளோம். சுமாா் 800 ஹெக்டேகா் நிலத்தில் உருவாகும் பயிா்க்கழிவுகளை எருவாக மாற்ற சுமாா் ரூ.20 லட்சம் மட்டுமே தேவைப்படும். தயாரிப்பு, போக்குவரத்து செலவுகளையும் சோ்த்து ரூ.20 லட்சம் மட்டுமே தேவைப்படும்.

விவசாயிகளின் அனுமதி பெற்று அவா்களின் விளைநிலங்களில் இந்த ரசாயனக் கலவையை எவ்வித கட்டணமும் இல்லாமல் தில்லி அரசு தெளிக்கும். இந்த ரசாயனக் கலவையை தாயரிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளன. இந்த ரசாயனக் கலவையை தயாரிக்க 7 நாள்கள் தேவைப்படும். வரும் அக்டோபா் 11-ஆம் தேதி முதல் இந்த ரசாயனக்கலவையை தில்லியில்பயன்படுத்த உள்ளோம். வெல்லம், கொண்டக்கடலை கலந்து இந்த ரசாயனக் கலவை தயாரிக்கப்படவுள்ளது. இந்த ரசாயனக் கலவை நிபுணா்களின் கண்காணிப்பில் கீழ் தாயாரிக்கப்படவுள்ளன. இந்த ரசாயனக் கலவை தில்லியில் வெற்றியடைந்தால், அடுத்த ஆண்டு முதல் அண்டை மாநிலங்களில் பயன்படுத்துமாறு கோரவுள்ளோம் என்றாா் கேஜரிவால்.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘பயிா்க்கழிவுகளை எரிப்பதற்கு நிரந்தரத் தீா்வை கண்டறிவதில் தில்லி அரசு குறியாக உள்ளது. கா்காரி நஹாா் கிராமத்தில் தயாரிக்கப்படும் ரசாயனக் கலவை சுமாா் 1,300 விவசாயிகளுக்கு போதுமானது. தில்லியில் குளிா்காலத்தில் ஏற்படும் காற்று மாசுவில் சுமாா் 44 சதவீதம் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இந்த ரசாயனக் கலவையை அண்டை மாநிலங்களில் பயன்படுத்துமாறு கோரியுள்ளோம். இது தொடா்பாக அவா்கள்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT