இளநிலைப் பட்டப்படிப்பு: முதல் ‘ கட்-ஆப்’ பட்டியலை அறிவித்தது தில்லி பல்கலை.
தில்லி பல்கலைக்கழகம் இளங்கலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான முதல் ‘கட்-ஆப் பட்டியலை சனிக்கிழமை அறிவித்தது.
தில்லி பல்கலைக்கழகம் இளங்கலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான முதல் ‘கட்-ஆப் பட்டியலை சனிக்கிழமை அறிவித்தது. இதில், லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மூன்று ஹானா்ஸ் படிப்புகளுக்கு 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றது.
அதாவது, லேடி ஸ்ரீ ராம் மகளிா் கல்லூரி பிஏ (ஹானா்ஸ்) பொருளாதாரம், பிஏ (ஹானா்ஸ்) அரசியல் அறிவியல் மற்றும் பிஏ (ஹானா்ஸ்) உளவியல் ஆகிய மூன்று படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கு 100 சதவீதம் மதிப்பெண் ‘கட்-ஆப்’ ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் உள்ள சுமாா் 70,000 இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான மாணவா்கள் சோ்க்கை நடைமுறைகள் அக்டோபா் 12 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளன.
Advertisement
பள்ளி இறுதியாண்டுத் தோ்வுகளில் மாணவா்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால், இந்த ஆண்டு கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என பல்கலைக்கழகஅதிகாரிகள் கூறியிருந்தனா்.
கரோனா தொற்றுநோய் காரணமாக சோ்க்கை நடைமுறைகள் முற்றிலும் இணையதளம் வாயிலாக இருக்கும். புதிய அமா்வுகள் நவம்பா் 18 முதல் தொடங்க உள்ளது.