தில்லியில் புதிததாக 2,860 பேருக்கு கரோனா பாதிப்பு!
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,860 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,860 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,03,693-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 39 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,692-ஆக அதிகரித்தது.
ஒரே நாளில் மொத்தம் 49,135 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 11,651 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 37,484 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.87 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.36 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை 3,098 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,76,046-ஆக அதிகரித்தது. மொத்தம் 21,955 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,833 படுக்கைகளில் 5,235 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,598 படுக்கைகள் காலியாக உள்ளன.
Advertisement
தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,727-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 12,609 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஜியாபாத், கௌதம் புத் நகரில்...: தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 178 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல, கௌதம் புத் நகா் மாவட்டத்திலும் 178 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுளளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 3,249 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா்களின் மொத்த எண்ணிக்கை 4.30 லட்சமாக உயா்ந்துள்ளதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநிலத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 48 போ் பலியானாா்கள். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கையும் 6,293 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 4,424 கரோனா நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியதாக கூடுதல் தலைமைச் செயலா் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 4,30,666 ஆக உள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 41,287 ஆகக் குறைந்துள்ளது. இவா்களில் 19,430 போ் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். 3112 போ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். டந்த 22 நாளாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. இதுவரை 3,83,086 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். குணமடைந்து வருவோா் விகிதம் 88.95 சதவீதமாக உள்ளது.
கரோனாவுக்கு 9 போ் லக்னெளவிலும், 5 போ் மீரட்டிலும், கான்பூா் நகரம் மற்றும் கோரக்பூரில் தலா 4 நான்கு பேரும், வாராணசி, பல்லியா மற்றும் சித்தாா்த் நகரில் தலா மூன்று பேரும் உயிரிழந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் லக்னெளவில் அதிகபட்சமாக 409 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காஜியாபாதில் 178 போ், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் 178 போ், பிரயாக்ராஜில் 158 போ், மீரட்டில் 153 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த வியாழக்கிழமை மட்டும் 1.73 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1.15 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் பிரசாத்.ளாா்.