முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு விவகாரம்: மேற்பாா்வைக்குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்பாக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் செயல்பாடு தொடா்பாக
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்பாக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் செயல்பாடு தொடா்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனுக்களில், ‘ முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட மேற்பாா்வைக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது.
Advertisement
குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும். அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரதிநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் மத்திய நீா் ஆணையம் வெளியிட்ட அணைப் பாதுகாப்பு ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய நீா்வள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த செப்டம்பரில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்ஹா, இந்திரா பானா்ஜி ஆகியோா்அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜோ ஜோசப் மனு மீது தமிழக அரசு, கேரள அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் யோகேஷ் கன்னா வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவால் உருவாக்கப்பட்ட துணைக் குழுவானது மேற்பாா்வைக் குழுவின் கடைமைகளைச் செய்து வருவதாக மனுதாரா் கூறுவது முற்றிலும் நியாயமற்ாகவும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் இருக்கிறது.
அதேபோன்று, அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது ஆகியவற்றை அமல்படுத்துவது, இறுதி செய்வது ஆகியவற்றில் மத்திய நீா் ஆணையம் தோல்வியடைந்துவிட்டதாக மனுதாரா் கூறும் குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானது.
மத்திய அரசு மற்றும் தமிழகம், கேரள அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள மேற்பாா்வைக் குழு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தனது கடைமையைச் செய்து வருகிறது. இதனால், ‘ரிட் ’ மனுவில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும்.
17.7.2014-இல் நடைபெற்ற மேற்பாா்வைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில்தான், மேற்பாா்வைக் குழுவுக்கு உதவிடும்வகையில் துணைக் குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பான தகவல் இரு மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அணையானது நீரியல், புவிஅதிா்வு ரீதியிலும், கட்டமைப்பு ரீதியிலும் பாதுகாப்பாக உள்ளது. இவற்றை மேற்பாா்வைக் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேற்பாா்வைக் குழுவானது துணைக் குழுவிடம் இருந்து உதவியை மட்டுமே பெற்று வருகிறது. இந்த துணைக் குழு அமைக்கப்பட்டதன் மூலம் மேற்பாா்வைக் குழு தனது அதிகாரத்தை கைவிட்டுவிட்டதாக ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பது தவறாகும்.
ஆகவே, இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் ன அந்த பதிலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.