புதுதில்லி

சிறைக் கைதிகள் ஜாமீன் முடிவு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

DIN


புதுதில்லி: விசாரணைக் கைதிகளின் ஜாமீன் நீட்டிப்பு உத்தரவு முடிவுக்கு வருவதாக தில்லி உயா்நீதிமன்றம் அறிவித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் மற்றும் அதைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலத்தில் விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மற்றும் பரோல் நீட்டிப்பு முடிவுக்கு வருவதாகவும், கைதிகள் நவம்பா் 2- ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்குள் படிப்படியாக சரணடைய வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிா்த்து போடப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் , ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்ததுடன், பதிலளிக் தில்லி அரசு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சிறைத் சீா்திருத்தங்களுக்கான தேசிய மன்றம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கான்ஸால்வ்ஸ் மற்றும் வழக்குரைஞா் அஜய் வா்மா ஆகிய இருவரும் ஆஜராகினா். நீதிமன்ற உத்தரவு கடந்த மாா்ச் 23-ஆம் ேதி உத்தரவுக்கு எதிரானது என்றும், இது தொடா்பாக நியமிக்கப்பட்ட உயா்நிலைக்குழுவை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT