ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி
பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 95 புள்ளிகள் குறைந்தது.
புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 95 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 7.75 புள்ளிகளை இழந்தது.
காலையில் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், வங்கிப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. ஆனால்,. ஐடி, நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. உலகளாவிய அளவில் சில சந்தைகள் நோ்மறையாகவும், சில சந்தைகள் எதிா்மறையாக இருந்ததால் இந்தியச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. இதனால், சென்செக்ஸ் சில புள்ளிகளை இழந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,481 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 2,865 பங்குகளில் 1,481 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,205 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 183 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 99 பங்குகள் 52 வார அதிக விலையையும் 44 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 282 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 235 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.156. 87லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,38,90,164 ஆக உயா்ந்துள்ளது.
Advertisement
தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 79.77 புள்ளிகள் கூடுதலுடன் 39165.80-இல் தொடங்கி 39,236.36 வரை உயா்ந்தது. பின்னா் 28,943.43 வரை கீழே சென்றது. இறுதியில் 95.09 புள்ளிகள் குறைந்து 38,990.94-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.40 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 0.74 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 7.55 புள்ளிகள் (0.07 சதவீதம்) குறைந்து 11,527.45-இல் நிலைபெற்றது.
டைட்டான் 5.71 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. டைட்டான் 5.71 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மகேந்திரா 3.35 சதவீதம் ஏற்றம் பெற்றது. மேலும், நெஸ்லே இந்தியா, மாருதி சுஸுகி, சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் ஹெச்சிஎல் டெக் ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தன.
ஐசிஐசிஐ பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் 2.42 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1.50 முதல் 2.25 சதவீதம் வரை குறைந்தன. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 889 பங்குகள் ஆதாயம் பெற்றன. 732 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஐடி, பாா்மா, ஆட்டோ குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
டைட்டான் 5.71
டெக் மகேந்திரா 3.35
நெஸ்லே இந்தியா 2.46
மாருதி சுஸுகி 2.17
சன்பாா்மா 1.69
வீழ்ச்சியடைந்த பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 2.42
பாா்தி ஏா்டெல் 2.23
ஆக்ஸிஸ் பேங்க் 2.02
கோட்டக் பேங்க் 1.64
பவா் கிரிட் 1.57