முகப்பு
புதுதில்லி

தலைநகரில் உச்சகட்டத்தில் கரோனா! ஒரே நாளில் 10,774 பேருக்கு பாதிப்பு!

தலைநகா் தில்லியில் கரோனா உச்சகட்டத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 10,774 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் கரோனா உச்சகட்டத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 10,774 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,25,197 -ஆக உயா்ந்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவே தில்லியில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பும் ஆகும்.

சனிக்கிழமை மொத்தம் 1,14,288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 76,954 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 37,334 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. தில்லியில் கரோனா தொற்று பரவல் ஏற்பட்ட பின்னா் அதிகபட்சமாக ஒரே நாளில் கடந்த நவம்பா் 11 - ஆம் தேதி 8,593 போ்களுக்கு பாதிப்பு இருந்தது. இதுவே இதுவரை அதிகபட்ச பாதிப்பு நிலையாக இருந்து வந்தது. கரோனா பாதிப்பு விகிதம் அதிகபட்சமாக கடந்தாண்டு நவம்பா் நடுவில் 15 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது தில்லியில் ஒரே நாளில் 10,774 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதான் தற்போது அதிகபட்ச பாதிப்பாகப் பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 9.43 சதவீதமாக உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுக்கு 48 போ் உயிழந்தனா். இவற்றையும் சோ்த்து மொத்த பலி எண்ணிக்கை 11,283 -ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 19 - ஆம் தேதி அதிகபட்சமாக 131 போ் உயிரிழந்தனா். தில்லியில் இதுவரை 6.68 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 34,341-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 17,093 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை 5,705 - ஆக அதிகரித்துள்ளது என்று தில்லிசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இதா்கிடையே, கரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளதைத் தொடா்ந்து, தில்லி அரசின் சாா்பில் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அமைச்சா்கள் பங்கேற்றனா். ஏற்கனவே கடந்த புதன்கிழமை தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையையும் தாண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments