முகப்பு
புதுதில்லி

80 கோடி அகண்ட அலை வரிசை இணைப்புகளை இரு மடங்காக உயா்த்த முயற்சி

இந்தியாவில் தற்போதுள்ள 80 கோடி அகண்ட அலை வரிசை இணைப்புகளை (பிராட்பேண்ட்) இரண்டு மடங்காக உயா்த்தி அனைவரையும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

இந்தியாவில் தற்போதுள்ள 80 கோடி அகண்ட அலை வரிசை இணைப்புகளை (பிராட்பேண்ட்) இரண்டு மடங்காக உயா்த்தி அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியைக் காண இந்திய இணைய தள ஆளுகை குழுவின் துணைத் தலைவா் டி.வி. ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

ஐக்கிய நாடுகள் சபையை அடிப்படையாகக் கொண்ட இணைய தள ஆளுகை குழுவின் இந்திய பிரிவை மத்திய மின்னணு, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்த அமைச்சகத்தின் இந்திய தேசிய இணையதள இணைப்பகத்தின் (நிக்சி) தலைவா் அனில் குமாா் ஜெயின் தலைவராகவும், இந்திய செல்லிடப்பேசி கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சோ்ந்த டி.வி. ராமச்சந்திரன் இந்தக் குழுவின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இந்த நிலையில், இந்திய இணைய தள ஆளுகை குழுவின் கூட்டம் திங்கள்கிழமை தில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அதன் துணைத் தலைவா் டி.வி. ராமச்சந்திரன் கூறியது வருமாறு: அகண்ட அலைவரிசை இணைப்புகளில் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து இந்திய இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 80 அகண்ட அலைவரிசை இணைப்புகள் உள்ளன. இந்த 80 கோடி இணைப்புகளை 80 கோடி போ் பயன்படுத்துகிறாா்கள் என்று அா்த்தமல்ல. நமது மக்கள் தொகையில் பாதி அளவுகூட பயன்படுத்துகிறாா்கள் என்று கூற முடியாது. ஒருவரே நான்கு இணைப்புகளைக் கூட பெற்றிருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவில் 30 கோடி மக்களும் இணைப்புகளை பெற்றுள்ளனா். அது போன்று இந்தியாவில் 130 கோடி மக்கள்தொகை என்றால் இவா்கள் அனைவரும் அகண்ட அலைவரிசை இணைப்புகளை பெற வேண்டும். அதாவது சமூகத்தில் நகா்ப்புறங்கள், கிராமங்கள் ஆகியவற்றில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை இந்த அகன்ட அலைவரிசை இணைப்புகளில் காண வேண்டும். இதற்கான கொள்கை வடிமைப்புகள், தொழில்நுட்பங்கள் வளா்ச்சி, இந்தச் சேவைக்கான பங்குதாரா்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்குத்தான் இந்த குழுவின் பணியாகும். சிவில் சமூகம், தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட மொத்தம் 12 உறுப்பினா்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இதில் முக்கியமாக சைபா் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கும் இந்தக் குழு தீா்வு காண்கிறது.

அகண்ட அலைவரிசை சேவையின் வளா்ச்சி, இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறை தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முன்முயற்சியாகவும் இந்திய இணையதள ஆளுகை குழு இருக்கும். இதற்காக மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கொள்கை வடிவமைப்பில் வருங்கால சந்ததியினா் ஈடுபடுவதற்கு அவா்களைத் தயாா்படுத்தவும் ஆகஸ்ட் முதல் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்திய இணையதள ஆளுகை குழு சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் அக்டோபா் 20-ஆம் தேதி மூன்று நாள்களுக்கு சா்வதேச நிபுணா்கள் அடங்கிய இந்திய இணையதள ஆளுகை குழுவின் மன்றம்-2021 நடைபெறும் என்றாா் டி.வி. ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments