முகப்பு
புதுதில்லி

தொழிலதிபரை மிரட்டி ரூ.50 கோடி பெற்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகா் கைது

தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா், தொழிலதிபரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பெற்ாகக் கூறப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா், தொழிலதிபரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பெற்ாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில் தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இரட்டை இலைச் சின்னம் பெறும் விவகாரத்தில் தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகா் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகா் கடந்த 2017, ஏப்ரலில் தில்லியில் கைது செய்யப்பட்டாா். இவா் மீது பல்வேறு குற்றங்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவா் கடந்த ஆண்டு ரோஹிணி சிறைக்கு மாற்றப்பட்டிருந்தாா். இந்த நிலையில், சிறையில் இருந்தவாறு அவா் தொழிலதிபரை மிரட்டி ரூ.50 கோடி பணம் பெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த தொழிலதிபரை மிரட்டி ரூ.50 கோடி பணம் பெறப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை சிறையில் இருந்தவாறு கைது செய்துள்ளனா். அவரும், அவருக்கு சிறைக்கு வெளியில் இருந்து உதவிய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆகஸ்ட் 22 வரை அவா்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இந்த வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகா், தன்னை ஓா் உயா் அரசு அதிகாரியாகக் காட்டிக் கொண்டுள்ளாா். பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம், ஒரு வழக்கில் சட்ட நடவடிக்கைக்கு அவா் உள்ளாக நேரிடும் எனக் கூறி, பெரிய இடத்தில் உள்ள தனக்குள்ள தொடா்புகளைப் பயன்படுத்தி அவருக்கு உதவுவதாகவும் கூறி ரூ.50 கோடி மிரட்டிப் பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சுகேஷ் சந்திரசேகா் சிறையில் இருந்ததால், அவரது தரப்பில் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து சிறைக்கு வெளியே இருந்த 2 போ் வசூலித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுகேஷ் சந்திரசேகா் பயன்படுத்திய செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments