7 தற்காலிக மருத்துவனைகள் அமைக்க தில்லி அரசு நிதி ஒப்புதல்
தில்லியில் கரோனா பாதிப்புஅதிகரித்தால் சமாளிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 7 தற்காலிக மருத்துவமனைகளை கட்டுவதற்கு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை நிதி ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்புஅதிகரித்தால் சமாளிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 7 தற்காலிக மருத்துவமனைகளை கட்டுவதற்கு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை நிதி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தால் சமாளிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 7 தாற்காலிக மருத்துவமனைகளை கட்டுவதற்கு தில்லி அரசிடமிருந்து தில்லி சுகாதாரத் துறைக்கு நிதி ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனைகளில் 7 ஆயிரம் ஐசியு படுக்கைகள் இடம்பெறும்.
இந்த மருத்துவமனைகள் சரிதா விஹாா், ஷாலிமாா் பாக், சுல்தான்புரி, கிராரி, ரகுபீா் நகா், ஜிடிபி மருத்துவமனை, சாச்சா நேரு பால் சிகித்ஸாலா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.
Advertisement
அடுத்த ஆறு மாதங்களில் இந்த மருத்துவமனைகளைக் கட்டி முடிக்க அனைத்து துறைகளும் போா்க்கால அடிப்படையில் செயல்படும். இவை தற்காலிகமானதாக இருந்த போதிலும், நீண்டகாலத்திற்கு பயன் அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ளது என்றாா் அவா்.
இது குறித்து துணை முதல்வா் மணீஸ் சிசோடியா கூறுகையில், ‘இந்தத் திட்டமானது தில்லி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை அளிக்கும் தில்லி அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்’ என்றாா்.