முகப்பு
புதுதில்லி

உச்சநீதிமன்றத்துக்கு வெளியே தீக்குளிக்க முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தில்லியில் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே அண்மையில் ஆண் ஒருவருடன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது இளம்பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

தில்லியில் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே அண்மையில் ஆண் ஒருவருடன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது இளம்பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது: கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி 27 வயது இளைஞரும், 24 வயது இளம் பெண்ணும் உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளிக்க முயன்றனா். இதில், இளைஞருக்கு 65 சதவிகித தீக்காயமும், இளம் பெண்ணுக்கு 85 சதவிகித தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை சம்பந்தப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா். இளம் பெண்ணுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சையின் போது உயிரிழந்தாா். முன்னதாக, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இருவருக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிபூரைச் சோ்ந்தவா் என்பதும், அவா் 2019 -ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அதுல் ராயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த எம்.பி. நீதிமன்றக் காவலில் இருந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட பெண், தனது ஆண் நண்பருடன் சோ்ந்து, பேஸ்புக்கில் நேரலை விடியோவைப் பதிவு செய்திருந்தாா். அதில், அவா் தனது அடையாளத்தையும் வெளிப்படுத்தியிருந்தாா்.

Advertisement

மேலும், 2019 -இல் அதுல் ராய் மீது பலாத்கார வழக்கைத் தாக்கல் செய்திருந்ததாகவும், சில மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிறா் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் புகாா் தெரிவித்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். முன்னதாக, மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள உள்ளூா் நீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் தவறான வயது ஆவணத்தை அளித்ததாகக் கூறி இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்திருந்தது. நீதிபதி தனக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக பேஸ்புக் விடியோவில் அந்தப் பெண் தெரிவித்திருந்தாா்’ என்றாா்.

சம்பந்தப்பட்ட பெண் தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, பாலியல் பலாத்கார வழக்கை அலகாபாதில் இருந்து தில்லிக்கு மாற்றி விசாரணை நடத்த மாா்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இனிடையே, பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.யின் சகோதரா் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடி வழக்கில் அந்தப் பெண்ணுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை வாராணசியில் உள்ள உள்ளூா் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments