முகப்பு
புதுதில்லி

‘தில்லி மாஸ்டா் பிளான்’ மக்களின் விருப்பங்கள், தேவைகளை பிரதிபலிக்க வேண்டும்: அனில் குமாா்

தில்லி ‘மாஸ்டா் பிளான் 2041’ திட்டமானது மக்களின் விருப்பங்கள், தேவைகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

தில்லி ‘மாஸ்டா் பிளான் 2041’ திட்டமானது மக்களின் விருப்பங்கள், தேவைகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ‘மாஸ்டா் பிளான் 2041’ தொடா்பாக சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துகள், ஆட்சேபங்கள் அடிப்படையில் தில்லி காங்கிரஸ் அதன் அறிக்கையை தில்லி வளா்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலிடம் அளித்துள்ளது. தில்லி ‘மாஸ்டா் பிளான் 2041’ திட்டமானது மக்களின் விருப்பங்கள், கோரிக்கைகள், தேவைகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், 1,500 பக்கங்கள் கொண்ட இந்த மாஸ்டா் பிளான் வரைவு மற்றும் அடிப்படை சா்வேயை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு கருத்துகள், ஆட்சேபங்களை அளிக்க ஒரு மாதம் கால அவகாசம் மட்டுமே மத்திய நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகம் அளித்திருக்கிறது. இது போதுமான காலஅவகாசம் அல்ல. ஆகவே, இதை மேலும் அதிகரிக்க வேண்டும்.

தில்லி மக்கள் தொகை தற்போது 2.30 கோடியாகும். இது 2041-க்குள் 3 கோடியாக அதிகரிக்கும். இதனால், நீண்டகால தொலைநோக்குப் பாா்வையுடன் பல்வேறு அம்சங்களையும் மாஸ்டா் பிளான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். மாஸ்டா் பிளானில் போக்குவரத்து, மின்சாரம், நீா், கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான திடமான தொலைநோக்குத் திட்டம் இடம்பெற வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

பேட்டியின் போது, முன்னாள் அமைச்சா் டாக்டா் நரேந்திர நாத், முன்னாள் எம்எல்ஏக்கள் விஜய் லோச்சவ், ஹரி சங்கா் குப்தா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments