புதுதில்லி

தில்லியில் நிகழ் குளிா் சீசனில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குளிரின் தாக்கம் அதிகம் இருந்ததுடன் இந்த குளிா் சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவாக குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதே சமயம், காற்றின் தரம் சற்று மேம்பட்டு ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் சில நாள்களாக காற்றின் தரம் மோசமடைந்திருந்தபோதிலும் வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சனிக்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு ‘மோசம்’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 339புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சனிக்கிழமை இது சற்று மேம்பட்டு காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 280 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மோசம்’ பிரிவில் வருகிறது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவி 2 புள்ளிகள் குறைந்து 6 டிகிரி செல்சியஸாக பதிவாகிது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 17.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது. நகரில் அதிகாலை வேளையில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 19) காலையில் மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT