புதுதில்லி

தில்லியில் காலையில் குளிா்: பகலில் மிதமான வெயில்

DIN

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 11 பதிவானது. பகலில் மிதமான வெயில் காணப்பட்டது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 புள்ளிகள் அதிகரித்து 28.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 86 சதவீதமாகவும், மாலையில் 50 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 311 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்ரவரி 23) மேலோட்டமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT