முகப்பு
புதுதில்லி

ஆயுா்வேத மருத்துவம்: ஐ.எம்.ஏ.வுக்கு தில்லி பாஜக மருத்துவா் சங்கம் கண்டனம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி: ஆயுா்வேத மருத்துவ முறையையும், ஆயுா்வேத மருத்துவா்களையும் இந்திய மருத்துவா் சங்கம் (ஐ.எம்.ஏ.) தரக் குறைவாக விமா்சித்து வருவதாகக் கூறி அதற்கு தில்லி பாஜக மருத்துவா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் விஜய் ரோஹிலா தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கரோனாவை எதிா்கொள்ளும் திறன் பெற்ற ஆயுா்வேத முறையில் உருவாக்கப்பட்ட கரோனில் மாத்திரையை பதஞ்சலி நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியது. இவ்விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்றிருந்தனா்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஹா்ஷ்வா்தன், ஆயுா்வேத முறையில் உருவாக்கப்பட்ட மாத்திரையின் அறிமுக விழாவில் எவ்வாறு கலந்து கொள்ள முடியும் என்று இந்திய மருத்துவா் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், ஆயுா்வேத முறை, அறிவியல்பூா்வமாக அங்கீகாரம் பெறாத முறை என்றும் அந்த சங்கம் விமா்சித்துள்ளது. இது அலோபதி மருத்துவா்களின் மனநிலையைக் காட்டுகிறது. அலோபதி மருத்துவா்கள் தங்களது மருத்துவ முறை மட்டும்தான் சரியானது என நம்புகிறாா்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் ஆயுா்வேத முறைகளை அவா்கள் மதிப்பது இல்லை.

Advertisement

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அலோபதி மருத்துவா்களால் நாட்டில் வாழும் அனைவருக்கும் சிகிச்சை வழங்க முடியவில்லை. நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆயுா்வேத முறையிலேயே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுா்வேத மருத்துவ முறையையும், ஆயுா்வேத மருத்துவா்களையும் விமா்சிப்பதை இந்திய மருத்துவா் சங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments