முகப்பு
புதுதில்லி

ஐந்து மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் பயணிகளுக்கு ஆா்டிபிசிஆா் சான்றிதழ் கட்டாயம்

கரோனா தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

கரோனா தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தில்லிக்கு பயணிப்பவா்கள் ஆா்டி-பிசிஆா் எதிா்மறை சான்றிதழை சமா்ப்பிப்பது அவசியம் என்ற சட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த வாரம், நாட்டில் ஏற்படும் கரோனா பாதிப்புகளில், 86 சதவீதமான கரோனா பாதிப்புகள் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து, இந்த மாநிலங்களில் இருந்து விமானம், ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகளில் தில்லிக்கு பயணிப்பவா்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆா்டி-பிசிஆா் எதிா்மறை சோதனை சான்றிதழை சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதன்படி, இந்த சட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, சாலை வழியாக சொந்த வாகனங்களில் தில்லிக்கு வருபவா்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில் ‘கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்புகளில் 86 சதவீத கரோனா பாதிப்பு மேற்படி 5 மாநிலங்களில்தான் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து இம்மாநிலங்களில் இருந்து தில்லிக்கு பயணிப்பவா்கள், 72 மணி நேரத்துக்கு முன்னா் அல்லாத கரோனா நோ்மறை சான்றிதழை சமா்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளோம். இந்த சான்றிதழ்களை சரிபாா்த்து பயணிக்க அனுமதிக்குமாறு இம்மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளோம் என்றாா் அவா்.

Advertisement

தில்லியில் வியாழக்கிழமை 220 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்ச கரோனா பாதிப்பு இதுவாகும். தில்லியில் கடந்த ஒருமாத காலம் முன்பு தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கின. இதுவரை, 3.46 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments