முகப்பு
புதுதில்லி

குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 புள்ளிகள் அதிகரித்து 15.2 டிகிரி செல்சியஸாக பதிவு

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் மேலோட்டமான பனிமூட்டம் நிலவிய நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் மேலோட்டமான பனிமூட்டம் நிலவிய நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் அதிகரித்திருந்தது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 புள்ளி அதிகரித்து 15.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 புள்ளிகள் அதிகரித்து 33 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 86 சதவீதமாகவும், மாலையில் 51 சதவீதமாகவும் இருந்தது.

Advertisement

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 221 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது.

என்சிஆரில் காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, பரிதாபாத், குருகிராம் பகுதியில் மோசம் பிரிவிலும் காற்றின் தரம் காணப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சராசரியாக 24 மணிநேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 252, கிரேட்டா் நொய்டாவில் 214, நொய்டாவில் 201, பரிதாபாதில் 207 மற்றும் குருகிராமில் 208 என பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 27) குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments